slider image

Nehru Vidhyasalai Hr.Sec.School

  • எங்களைப்பற்றி
  • வசதிகள்
  • செயல்பாடுகள்
  • பணியாளர்கள்
  • களஞ்சியம்
  • அறிவிப்புகள்
  • தொடர்புக்கு

எங்களைப்பற்றி

எம் பள்ளி 1948 ம் ஆண்டு பல கிறித்தவ கல்வி நிறுவனங்களை ஆரம்பித்த கனம் கேட்டி வில்காக்ஸ் அம்மையார் அவர்களுடைய முயற்சியால் திரு இஸ்ரேல் உபாத்தியாயர் அவர்களின் மேற்பார்வையில் அவர்களது புதல்வி திருமதி. வேதவல்லி ராஜா பேசிங்கர் அவர்களால் "நேரு ஆரம்பப் பாடசாலை" என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்டது. 125 மாணவர்களையும், 4 ஆசிரியர்களையும் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட எம்பள்ளி மறைந்த நம் மாபெரும் தலைவர் முன்னாள் தமிழக முதல்வர் திரு. காமராஜர் அவர்களின் கல்வித் தொண்டு பிரதிபலிப்பால் "நேரு வித்தியாசாலை" என்று 1954 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் நாள் பெயரிடப்பட்டது. 1954ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாகி, மேலும் உயர்ந்து 1986ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகவும், 2006 ஆம் ஆண்டு மேனிலைப்பள்ளியாகவும் உயர்த்தப்பட்டது. 1 முதல் 5 வகுப்பு வரை நேரு வித்தியாசாலை ஆரம்பப் பள்ளியாக நரிமேடு பகுதியிலும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை நேரு வித்தியாசாலை மேல்நிலைப்பள்ளியாக கோசாகுளம் வேதவல்லி நகர் பகுதியிலும் செயல்பட்டு வருகிறது.

'கேடில் விழுச்செல்வம் கல்வி' என்னும் வள்ளுவரின் வாக்கை இலக்காகக் கொண்டு கடந்த 70 ஆண்டுகளாக எம் பள்ளி கல்விச் சேவை செய்து வருகிறது. 2001ஆம் ஆண்டு முதல் தமிழ் வழிக் கல்வியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் சுயநிதிப் பிரிவாக செயல்பட்டு வருகின்றது. மேலும் 2003 - 2004 கல்வி ஆண்டில் தொடங்கப் பெற்ற ஆங்கில வழி கல்வியானது தற்பொழுது 12 ஆம் வகுப்பு வரை சுயநிதிப் பிரிவாக செயல்பட்டு வருகிறது. நேரு கல்விச் சங்கத்தினரால் திறம்பட நிர்வகிக்கப்படும் அரசு உதவிபெறும் கிறித்தவ சிறுபான்மை நிறுவனமான எம் மேல் நிலைப் பள்ளியில் 1351 மாணவர்களும் 290 மாணவிகளுமாக மொத்தம் 1641 பேர் பயிலுகின்றனர்.

வசதிகள்

விசாலமான வகுப்பறைகள் :

இயற்கை எழிலுடனும், காற்றோட்ட வசதியுடனும், அமைதியான சூழலில் ஒரு ஏக்கர் 399 சதுர அடி பரப்பளவில் அமைந்த எமது பள்ளியில் இருக்கை வசதிகள் உடைய விசாலமான வகுப்பறைகள் அமைந்துள்ளன. மாணவிகளுக்கென தனிப்பிரிவு வகுப்பறைகளும் உள்ளன.

ஆய்வக வசதி :

இயற்பியல் ஆய்வகம், வேதியியல்ஆய்வகம், உயிரியல் ஆய்வகம், கணினியியல் ஆய்வகம் என.. ஏட்டுப் படிப்போடு செய்முறை அறிவையும் புகுத்தி சிந்தனையைத் தூண்டி வருங்கால விஞ்ஞானிகளை உருவாக்கி வருகிறோம்.

நூலக வசதி :

மாணவர்களின் அறிவு பசிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 6000க்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் எமது பள்ளி நூலகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

சுகாதாரமான கழிவறைகள் :

மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு என தனித்தனியாக சுகாதாரமான கழிவறைகள் உள்ளன.

சத்துணவு :

சத்துணவுத் திட்டத்தின் மூலம் 200 மாணவர்கள் பயன்பெறும் வகையில் சத்துணவுக்கூடம் அமைந்துள்ளது.

அரசின் விலையில்லா பொருட்கள் :

மாநில அரசால் வழங்கப் பெறும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் உடனடியாக மாணவர்களுக்கு சென்றடையும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

• விலையில்லா புத்தகங்கள்

• விலையில்லா நோட்டுப் புத்தகங்கள்

• விலையில்லா சீருடை

• விலையில்லா வண்ணப் பென்சில்கள்

• விலையில்லா காலணி

• விலையில்லா கணித உபகரணப் பெட்டி

• விலையில்லா உலக வரைபடங்கள்

• விலையில்லா புத்தகப்பை

• விலையில்லா புவியியல் வரைபடம்

• விலையில்லா மிதிவண்டி

விளையாட்டு மைதானம்:

"உடல் வலுவுற்றால் உள்ளமும் வலுவுறும்" என்னும் பழமொழிக்கேற்ப மாணவர்களின் உடல் வலிமையை பேணும் நோக்கில் 1.39 ஏக்கர் பரப்பளவில் எம் பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது.

• கூடைப்பந்து

• கோ - கோ

• கபடி

• ஹாக்கி

• சதுரங்கம்

• இறகுப் பந்து

• கால்பந்து

• கையுந்து பந்து

• வளைய பந்து

• ஜூடோ

• குத்துச்சண்டை

• சிலம்பம்

• ஜிம்னாஸ்டிக்

• தடகளப்போட்டிகள்

• டேக்வேண்டோ

பல்பொருள் அங்காடியும், உணவகமும்:

மாணவர்களின் நலன் கருதி பல்பொருள் அங்காடியும் உணவகமும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

தடையில்லா மின்சாரம் :

பள்ளியின் அன்றாட காரியங்கள் எவ்வித தடையுமின்றி சீராக நடைபெற 24 மணி நேரமும் ஜெனரேட்டர் வசதி உள்ளது. கண்காணிப்பு

கண்காணிப்பு கேமரா வசதி:

மாணவர்கள் பாதுகாப்பு கருதி பள்ளி வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பேருந்து வசதி:

நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளிக்கு வருவதற்கு பள்ளிப் பேருந்து வசதி இயங்கி வருகிறது. மேலும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதற்கு ஏதுவாக இலவச பஸ் பாஸ் பெற்றுத் தரப்படுகிறது. பாதுகாப்பு கருதி பேருந்துகள் பள்ளி துவங்கும் மற்றும் முடியும் நேரங்களில் பள்ளி வளாகத்தினுள் வந்து மாணவர்களை ஏற்றிச் செல்லவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இண்டர்காம் வசதி:

பள்ளி அலுவலகத்திலிருந்து வகுப்பறையிலுள்ள ஆசிரியருடன் தொடர்பு கொள்ளும் வகையில் இண்டர்காம் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது .

SMS வசதி :

மாணவர்கள் தினமும் வீட்டில் செய்ய வேண்டிய வீட்டுப்பாடம் பெற்றோரின் கைபேசிக்குக் குறுந்தகவல் செய்தியாகத் தெரிவிக்கப்பட்டு, மாணவர்கள் தங்கள் வீட்டுப் பாடங்களைச் சரியாக செய்ய ஊக்கப்படுத்துகிறோம். மேலும் மாணவர்களின் கல்வித்திறன், வருகை, ஒழுங்கீன செயல்கள் ஆகியவை உடனடியாகக் குறுந்தகவல் செய்தியாகப் பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினரால் சரி செய்யப்படுகிறது.

செயல்பாடுகள்

தற்காப்பு பயிற்சி :

அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் பாதுகாப்பு மற்றும் தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் தற்காப்பு கலைகள் பயிற்றுவிக்கப்படுகிறது.

அறிவியல் கண்காட்சி

• பள்ளி அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளுக்கு பேசிங்கர் இளம் விஞ்ஞானி விருது மற்றும் 1000 ரூபாய் ரொக்கப் பரிசு.

• மாவட்ட அறிவியல் கண்காட்சியில் படைப்புகளை காட்சிப்படுத்துதல்.

• இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் பங்கேற்றல்.

• ஆசிரியர்களின் படைப்புகளை பள்ளி அறிவியல் கண்காட்சியிலும், மாநில அளவிலான கண்காட்சியிலும் காட்சிப்படுத்தல்.

• மாணவர்களை ஊக்கப்படுத்தி, அதிக அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தும் ஆசிரியருக்கு "Best Performance Award" சுழற் கேடயம் மற்றும் சான்றிதழ்.

திருக்குறள் தேர்வு:

உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் திருக்குறள் தேர்வில் எம் பள்ளி மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். இத்தேர்வில் எம் பள்ளி தொடர்ந்து 16 ஆண்டுகளாக மாநில அளவில் முதல் பரிசை பெற்று வருவது பெருமைக்குரியதாகும்.

போட்டிகள்:

• குழந்தைகள் தின போட்டிகள் .

• தமிழ் வளர்ச்சித் துறை நடத்தும் போட்டிகள்.

• பள்ளிக்கல்வித் துறை நடத்தும் போட்டிகள்.

• காந்தி அருங்காட்சியகம் நடத்தும் போட்டிகள்

• முரசொலி அறக்கட்டளை சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா போட்டிகள்.

போட்டிகளின் பிரிவுகள்

o செதுக்குச் சிற்பம்.

o வரவேற்புரை நிகழ்ச்சி தயாரித்தல்.

o பலகுரல் நடிப்பு.

o தனிநபர் நடிப்பு .

o நடனம்

o நாடகம்

o வாத்தியக்கருவி இசைத்தல்

o வினாடி-வினா

o பேச்சுப் போட்டி

o கட்டுரைப் போட்டி

o ஓவியப் போட்டி

o பாட்டுப் போட்டி

o கவிதைப் போட்டி

o கழிவுப் பொருள்களில் கலையாக்கம்

விளையாட்டுத்துறை போட்டிகள் :

• பழைய விளையாட்டுகள்

  • o கபடி .
  • o கோ-கோ
  • o கூடைப்பந்து
  • o ஹாக்கி
  • o சதுரங்கம்
  • o இறகுப்பந்து
  • o வளைய பந்து
  • o கால்பந்து
  • o கையுந்துபந்து

• புதிய விளையாட்டுகள்

  • o குத்துச்சண்டை
  • o சிலம்பம்
  • o ஜிம்னாஸ்டிக்
  • o தடகளப் போட்டிகள்
  • o டேக்வேண்டோ
  • o கராத்தே

கணினிக் கல்வி:

• 6 முதல் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கணினிக் கல்வி

• கணினியியல் ஆய்வகத்தில் செய்முறைக் கல்வி

ஹிந்தி வகுப்பு :

ஆறு முதல் எட்டாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் தேசிய மொழியான ஹிந்தி கற்பிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் ' பரிச்சயா தேர்வு எழுதினர்.

திறனாய்வு தேர்வு பயிற்சி வகுப்பு :

• எட்டாம் வகுப்பு மாணவர்கள் - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு(N.M.M.S)

• பத்தாம் வகுப்பு மாணவர்கள் - தேசிய திறனாய்வு தேர்வு (NTSE)

• மேல்நிலைக் கல்வியை முடித்த மாணவர்கள் தேசிய நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு அரசு நடத்தும் பயிற்சி வகுப்புகளில் ஆசிரியர் துணையுடன் பயில வழி செய்தல்.

சிறப்பு பயிற்சி வகுப்புகள்:

அனைத்து வகுப்புகளிலும் பின்தங்கிய மாணவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களின் முன்னேற்றத்திற்காக மாலை வேளையில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

கழக செயல்பாடுகள் :

6முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில்

• சாரண சாரணியர் இயக்கம் .

• ஜூனியர் ரெட் கிராஸ்.

• தேசிய பசுமைப்படை .

• சுற்றுச்சூழல் இயக்கம்.

• வாழ்க்கை திறன் கல்வி.

• கலை இலக்கிய கழகம் .

• தமிழ் கழகம்.

• ஆங்கிலக் கழகம்.

• கணித கழகம் .

• அறிவியல் கழகம்.

• சமூக அறிவியல் கழகம் .

• தொன்மை பாதுகாப்பு கழகம் .

• உடல்நல கழகம்.

ஆகியவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

மாணவர் நலத்திட்டம் :

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வழங்கும் நிதியுதவியினால் மாணவர் நலத்திட்டம் (Charity Club) ஏற்படுத்தப்பட்டு ஏழை மாணவர்களின் அடிப்படை தேவைகளைக் கண்டறிந்து, அதனை பூர்த்தி செய்யும் வகையில் செயல்படுகிறது.

பெற்றோர் ஆசிரியர் கூடுகை :

பெற்றோர் ஆசிரியர் கூடுகையானது 6 முதல் 12 வகுப்பு வரையில் தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டு பெற்றோர்களுடன் கலந்துரையாடி, மாணவர்களின் பிரச்சனைகள் ஆய்வு செய்யப்பட்டு மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது.

சமூக விழிப்புணர்வு வாரம் :

எம் பள்ளி மாணவர்களுக்கு சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்

• சாலை போக்குவரத்து வாரம்,

• ஆரோக்கிய வாரம்,

• எய்ட்ஸ் விழிப்புணர்வு வாரம் மற்றும்

• சுற்றுச்சூழல் வாரம்

ஆகியவை அனுசரிக்கப்படுகின்றன.

வாழ்க்கை திறன் கல்வி:

ஏட்டுக் கல்வியோடு வாழ்க்கைத் திறன் கல்வியும் 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

• கைவேலை:

• தையல்:

• காய்கறி மற்றும் கீரை வகைகளை இயற்கை உரங்களை பயன்படுத்தி ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் காலை மற்றும் மாலை வேளைகளில் மாணவர்கள் தோட்டக் கலைக் கல்வியைக் கற்கின்றனர்.

Spoken English:

ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்க்கும் விதமாக ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை ஆங்கிலத்தில் இறைவழிபாட்டுக் கூட்டம் நடத்தப்படுகிறது. அன்றைய நாள் முழுவதும் மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவதற்கு அறிவுறுத்தப்பட்டு அதற்கான சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சிறப்பு தின கொண்டாட்டங்கள் :

• சுதந்திர தின விழா

• குடியரசு தின விழா

• ஸ்தாபகர் தினம்

• விளையாட்டு விழா

• பள்ளி ஆண்டுவிழா

• கிறிஸ்துமஸ் விழா

• கல்வி வளர்ச்சி நாள்

• குழந்தைகள் தின விழா

• ஆசிரியர் தினம்

பள்ளியில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் பள்ளி வாத்தியக்குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பெற்றோர் பங்கு:

மாணவர்களின் ஒழுக்கம், கல்வி, பள்ளியின் முன்னேற்றம் குறித்து பெற்றோரின் கருத்துகளைப் பெற ஆலோசனைப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பெற்றோரின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்களின் குறைகளைத் தீர்க்க புகார் பெட்டி வைக்கப்பட்டு, அவர்களின் தேவைகள் அறிந்து, அவை நிவர்த்தி செய்யப்படுகின்றன.

பணியாளர்கள்

எமது பள்ளியில் முப்பத்துமூன்று அரசு உதவி பெறும் ஆசிரியைகளும் , நிர்வாகத்தின் கீழ் நாற்பத்தாறு ஆசிரியைகளும், கணினி இயக்குவதற்கு ஒருவரும், அலுவலக உதவியாளராக மூன்று பேரும். பள்ளியின் காவலராக நான்கு நபரும், துப்புரவு பணிக்கு மூன்று நபரும், மொத்தமாக தொண்ணூறு பணியாளர்கள்சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.

களஞ்சியம்

Annual Day

Annual Day

Sports Day

Sports Day

Independence Day

Independence Day

Republic Day

Republic Day

Children's Day

Children's Day

அறிவிப்புகள்

6 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு சேர்க்கை நடைபெறுகிறது.

தொடர்புக்கு

முகவரி :
நேரு வித்தியாசாலை மேல்நிலைப்பள்ளி
வேதவல்லி நகர்,
தபால் தந்தி நகர் விரிவாக்கம்,
கோசாகுளம்,
மதுரை - 625 017 .
தொலைபேசி எண்: 0452-2640135
மின்னஞ்சல் முகவரி : nehruvidhyasalaihssnarimedu@gmail.com
முகநூல்:Nehru Vidhyasalai
  • About Us
  • Facilities
  • Activities
  • Gallery
  • Announcement
  • Contact

About us

With the untiring efforts of Her Highness Katie Wilcox who established many Christian academic institutions, our school was founded by Mrs. Vedhavalli Raja Basinger under the guidance of Mr. Israel Ubathyayar, with the name of Nehru Primary School, our service started with 125 students and teachers. As the reflection of the academic service of our Ex. Chief Minister of TamilNadu, , Mr. Kamarajar our school was bestowed with the new name as “Nehru Vidhyasalai” on 21st November, 1954. Our school was upgraded as a middle school in 1954, high school in 1986 and higher secondary school in 2001. At present, the primary section functions at Narimedu and the higher classes function at Kosakulam Vedhavalli Nagar.

Our school is rendering academic services for 70 years with the sublime attitude “Education is the priceless and eternal wealth” . +1 and +2 classes through Tamil medium are functioning as the self financing wing. The education stream through English medium which was started in 2003 - 2004 functions as self financing wing upto +2 now. Our school, a minority institution is aided by the Tamilnadu Government and administered by Nehru Educational Society has the enrolment of 1641 students which includes 1351 boys and 290 girls.

Infrastructure

Spacious Classrooms:

Our school is situated in a serene natural environment with an airy and bright atmosphere. Our school premises cover the space of an acre and 399 square feet with its spacious classrooms.

Labs:

Fully furnished individual laboratories for Physics, Chemistry, Biology and Computer science provide a practical knowledge ‘learning by doing’ experience to our children apart from classroom teaching.

Library:

To quench the intellectual demands of our children our school library has been stuffed with more than 6000 books that can kindle the reading urge of our school.

Tidy toilets:

Our school has separate, neat, clean and well maintained toilets for boys and girls to ensure a healthy and hygienic way of life.

Mid- day meal:

Aiming at the nutritional status, 200 students are provided with the mid day meal.

Benefits from the Government:

War footed measures are taken always to receive all the benefits offered by the TN Government like free books, notebooks, uniform, footwears, Geometric boxes, Atlas, School bag, Bicycle are issued to the students without any delay or short supply.

Play ground:

“A sound body is the abode of a sound soul”. To enhance the physical fitness and sportive spirit of our children 1.39 acre space of our playground proves to be a handy tool, where students take up immense training and practice for sports and games like

• Basket ball

• Kho-Kho

• Kabadi

• Hockey

• Chess

• Shuttle cock

• Volley ball

• Tennikoit

• Judo,

• Boxing

• Silambam

• Gymnastics

• Athletics

• Taekwondo.

Stationery shop and canteen:

A stationery shop of our school fulfils the immediate needs of stationeries and a well maintained Canteen provides delicious and nutritious food supply.

CCTV:

The whole premesis of our school is under the surveillance of CCTV cameras for the safety and security of our children.

Uninterrupted Power Supply:

Our school assures the uninterrupted power supply with the assistance of all time ‘ready- to - go’ Genset facility.

Transport Facility:

Our school bus transport that connects various junctions helps the students to make easy and safe conveyance. The students who travel by government buses are helped get the free bus passes. As a safety measure, the buses are brought inside the premises before the assembly and after the school closing time.

Intercom facility:

Intercom facility has been arranged between the classrooms and the office room for the instant communication.

SMS facility:

Home works are well planned and intimated to the parents through SMS to the noted numbers of the parents. Disciplinary measures, punctuality, academic efficiency and irregularity of the children are immediately passed to the parents’ notice for the immediate response to attend the issues, if any.

Activities

All the students are taught Martial Arts for their physical fitness, safety conscious and self confidence.

Science Exhibition:

Our school is ever ready to encourage the students’ Scientific fervor and conducts science exhibition every year in which the students take part enthusiastically with their projects and models.

• The best two exhibits are awarded the cash prize of Rs.1000 and concerned students are bestowed with the title of “Young scientist”.

• Students are encouraged to participate in District level exhibitions.

• Our school is pridebound to make the students participate in the National and International science exhibition too.

• Our school assists our science teachers to display their exhibits at the state level science forum.

• The science teachers who encourage the children to display maximum projects are awarded the rolling trophy and a certificate with the title of “Best Performance Award”

Thirukkural exam:

All the students of our school take part in the Thirukkural exam conducted by the World Thirukkural Association. Our school holds a proud position of winning the first prize in Thirukkural exam continuously for sixteen years which is a unique and noteworthy record.

Competitions:

Our school conducts various competitions to identify and develop the talents and skills of our students.

• Talent search Competitions .

• Children’s Day Competitions.

• Tamil Department Competitions.

• The Educational Department Competitions.

• Competitions conducted by Gandhi Museum .

• Peraringar Anna Birthday competitions.

• Small Savings Department Competitions.

are some of the mention worthy competitions conducted regularly with a range of sub divisions like

• Sculpture Creation.

• Compering.

• Public speaking.

• Mimicry.

• Acting

• Dance.

• Drama.

• Singing.

• Instrumental Music.

• Quiz.

• Elocution.

• Composition writing.

• Creative writing.

• Poetry Writing.

• Art from waste.

Physical Education Department also contributes a considerable share in conducting competitions in Traditional and Modern sports and games.

• Traditional Games

  • o Kabhadi.
  • o Kho Kho.
  • o Basket ball.
  • o Hockey.
  • o Chess.
  • o Shuttle cock.
  • o Foot ball.
  • o Tennikoit.
  • o Volley ball.

• Modern Games

  • o Judo.
  • o Boxing.
  • o Silambam.
  • o Gymnastic.
  • o Athletics.
  • o Taekwondo.
  • o Karate.

Computer Education:

Catering to the needs of this digital world ,students from 6 to 9 std are taught Computer Science with practical classes to make them techno wizards.

Hindi classes:

All the students from std 6 to 8 are taught Hindi and they are prepared to write ‘Parichaya ‘exam.

Talent search Exams:

Our school is very keen on making the children face as many exams as possible at various levels.

To mention a few

• 8th std students-National Means Cum Merit Scholarship Examination.

• 10 std students-National Talent Search Exam

After +2, students are guided to join “NEET COACHING” conducted by TN government.

Special classes:

Late bloomers of all the classes are identified and given special coaching in the evening.

Association Activities:

Students from class 6 to 9 are involved in many group and individual activities to bring out their excellence in co-curricular and extra curricular activities like

• Scout and Guides.

• Junier Red Cross Society.

• National Green Corps.

• Environment movement.

• Life Skill Programme.

• Arts club.

• Tamil Literary club.

• English Literary club.

• Maths Club.

• Science Club.

• Social Science Club.

• Cultural Clubs.

• Health club.

Students Welfare Scheme:

Our school teachers and students join hands together in establishing and functioning a ‘Charity Club’ that spot out economically downtrodden students and fulfil their basic needs to continue their education pressure free.

Parents Teachers Meet:

Individual Parents Teachers Meet for the students of class 6 to 12 are conduted in regular intervals to receive the suggestions and to solve the issues, if any, for the upgradation of the educational development.

Social awareness weeks:

As students are the responsible citizens of tomorrow, they are engaged social activities too to create a social awareness among themselves and to have a harmonious rapport with the society. Our school holds the “one week programmes” like

• Traffic and transport week

• Health week

• AIDS awareness week

• Environment week

and the concerned elements are focused for a better social order.

Life skills education:

As education doesn't stop with classrooms alone, students of classes 6 to 9 are given ‘Life skills Education’ as

• art and craft

• embroidery

• gardening (which is carried out using natural manure in the morning and evening with the guidance of teachers)

Celebrations:

Our school feels extremely proud and committed to hold and celebrate National, Religious and Social days to relish those emotions forever. Some of the celebrations are listed below:

• Independence Day

• Republic Day

• Founders day

• Sports day

• Annual Day

• Christmas Day

• Education development Day

• Children's Day

• Teachers Day

and the like.

It is to be noted that our school music troupe supplements all the school functions with the students who are the budding musicians.

PTA meets:

Working together is an easy way for success. So our school is ever ready to join hands with parents. PTA meets are conducted in regular intervals. Queries and suggestions of the parents are attended with utmost sincerity and valuable suggestions are taken into account at once for the upliftment of our school. The best students of different fields are awarded and rewarded in those PTA junctions.

Gallery

Annual Day

Annual Day

Sports Day

Sports Day

Independence Day

Independence Day

Republic Day

Republic Day

Children's Day

Children's Day

Announcement

Admission is going on for classes 6 to 9. Transfer Certificate should be produced for admission

Contact

Our address is:
Nehru Vidhyasalai Higher Secondary School,
Vedhavalli Nagar, P&T Nagar Extension,
Kosakulam,
Madurai - 625 017.
Ph. No.: 0452 - 2640135
Email: nehruvidhyasalaihssnarimedu@gmail.com
Facebook:Nehru Vidhyasalai
செய்தியும் நிகழ்வும்
  • விளையாட்டுவிழா அறிக்கை
  • எம் பள்ளியின் விளையாட்டுவிழாவானது 31.08.2019 அன்று, தாளாளர் முன்னிலை வசிக்க சிறப்பு விருந்தினர் திரு.ராமகிருஷ்ணன் - Superintendent of police NIB, CID., தலைமையில் இறைவாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே ஆரம்பமானது. தாளாளர் அவர்கள் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர் சிறப்புரையாற்றினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிறகு மாணவர்கள் ஆசிரியர்கள், பெற்றார்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பொறுப்புத் தலைமையாசிரியர், உதவித் தலைமையாசிரியர் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
  • அறிவியல் கண்காட்சி
  • நேரு வித்தியா சாலை மேனிலைப் பள்ளியில் 06.09.2019 அன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. காலை 9:30 மணியளவில் Mr.Mr.Rajesh Professor of P.G & Research, Department of zoology, the American college ரிப்பன் வெட்டி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாணவர்கள் நூற்றுக்கணக்கான அறிவியல் மாதிரிகளைப் படைத்திருந்தனர். சிறப்புவிருந்தினர் பேசிங்கர் மெட்ரிக் பள்ளியின் முதல்வர், பிற 3 ஆசிரியைகள் நடுவர்களாகபங்கேற்று 6 முதல் 12 ஆம் வகுப்புகளில் நிலைக்கு 3 பேர் வீதம் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளுக்குத் தேர்வு செய்தனர். மாணவர் மட்டுமின்றி அறிவியல் ஆசிரியைகள் அத்துணைபேரும் தனித்தனியாக தமது படைப்புகளைச் சிறப்பு விருந்தினருக்கு விளக்கி கூறினார்கள். அவர்களுக்கும் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களில் பரிசுகள் வழங்கப்பட்டு கண்காட்சி இனிதே மாலை 3:30 மணிக்கு நிறைவு பெற்றது.
  • குறுவட்ட அளவிலான தடகளப் போட்டி
  • 29.8.19 அன்று நடந்த 'C' குறுவட்ட அளவிலான தடகளப் போட்டியில் நேரு வித்தியாசாலை மேனிலைப் பள்ளியின் மாணவர்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தையும், தனிநபர் U.14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் V.SRIDHAR சாம்பியன் பட்டத்தையும் பெற்று எம் பள்ளிக்கு வெற்றி வாகை சூட்டியுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பள்ளி, தாளாளர் நிர்வாகிகள், தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்
  • அஞ்சல் பயிற்சி மற்றும் வினாடி வினா திட்டம்
  • சுதந்திர தின விழா
  • எம் பள்ளியில் 15.08.2019 அன்று சுதந்திர தின விழாவானது பொறுப்புத் தலைமையாசிரியர் அவர்கள் தலைமையில் இறைவாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே ஆரம்பமானது. சிறப்பு விருந்தினர் அழகை ராஜன் இராமநாதன் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் திரு ஜெயசங்கரன் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி, சுதந்திர தினவிழா குறித்துச் சிறப்புரையாற்றினார். சுதந்திர தினத்தை போற்றும் வண்ணம் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இருந்தன. இறுதியில் சிறப்பு விருந்தினர் அவர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
  • நீர்பாதுகாப்பு விழிப்புணர்வு - அறிக்கை
  • எம் பள்ளியில் 15.07.2019 அன்று நீர்பாதுகாப்பு விழிப்புணர்வு நாளானது பொறுப்புத் தலைமையாசிரியர் அவர்கள் தலைமையில் இறைவாழ்த்து, தமிழ் தாய் வாழ்த்துடன் இனிதே ஆரம்பமானது. திருமதி. அபிராமி சுந்தரி அவர்கள் ' நீர்பாதுகாப்பு ' குறித்துச் சிறப்புரையாற்றினார். நீரின் முக்கியத்துவம் குறித்து மாணவச்செல்வங்கள் பட்டிமன்றம், பாடல்கள் மூலம் அறிவுறுத்தனர்.
  • அதனைத்தொடர்ந்து பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் நீர்பாதுகாப்பு குறித்து வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்திக் கொண்டு பேரணி சென்றனர்.
  • டாக்டர் A.P.J அப்துல் கலாம் நினைவுதினம்
  • எம் பள்ளியில் 20.07.2019 அன்று டாக்டர் A.P.J அப்துல் கலாம் அவர்களின் நினைவுதினக் கூட்டமானது பொறுப்புத் தலைமையாசிரியர் அவர்கள் தலைமையில் இறைவாழ்த்து, தமிழ் தாய் வாழ்த்துடன் இனிதே ஆரம்பமானது. பொறுப்புத் தலைமையாசிரியர் அவர்கள் டாக்டர் A.P.J அப்துல் கலாம் குறித்துச் சிறப்புரையாற்றினார்.
  • எம் பள்ளியில் 15.07.2019 அன்று வளர்ச்சி நாளானது பொறுப்புத் தலைமையாசிரியர் அவர்கள் தலைமையில் இறைவாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே ஆரம்பமானது. பொறுப்புத் தலைமையாசிரியர் அவர்கள் பாரதப்பெருந்தலைவர் குறித்துச் சிறப்புரையாற்றினார். மாணவர்கள் காமராசரைப் போற்றும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்குப் பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை போட்டிகளை நடத்தி, வெற்றி பெற்றவர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
  • மாணவர்கள் பதிவியேற்பு விழா
  • எம் பள்ளியில் 04.07.2019 அன்று மாணவர்கள் பதவியேற்பு விழாவானது பொறுப்புத் தலைமையாசிரியர் அவர்கள் தலைமையில் இறைவாழ்த்து, தமிழ் தாய் வாழ்த்துடன் இனிதே ஆரம்பமானது. பொறுப்புத் தலைமையாசிரியர் அவர்கள் தலைவர்களின் பண்புகள் குறித்துச் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பள்ளியின் ஒழுங்கிற்காக செயல்படும் அமைச்சர்களை அறிமுகப்படுத்தினர், பிறகு வகுப்புத் தலைவன், துணைவகுப்புத் தலைவன் ஆகியோரை அறிமுகப்படுத்தினர்.
  • போதையின் தீமைகள் - விழிப்புணர்வு தினம்
  • எம் பள்ளியில் 15.06.2019 அன்று பொறுப்புத் தலைமையாசிரியர் அவர்கள் தலைமையில் போதை ஒழிப்புதினமானது இறைவாழ்த்து, தமிழ் தாய் வாழ்த்துடன் இனிதே ஆரம்பமானது. திருமதி.அனிதாமலாதி அவர்கள் போதையின் தீமைகள் குறித்துச் சிறப்புரையாற்றினார். பிறகு மாணவர்களுக்குப் "போதையை ஒழிப்பதில் மாணவர்களின் பங்கு" என்னும் தலைப்பில் கட்டுரை, ஓவியம், வாசகம் எழுதுதல் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றமானவர்களுக்குக் காவல்துறை ஆணையர் அவர்கள் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
  • வாசகம் எழுதுதல் 1. S. அஸ்வின் XI F - II
  • வாசகம் எழுதுதல் 2. விக்னேஷ் IX A2 - II
News and Events
  • Annual Sports Day 2019
  • Our School Annual Sports Day was held on saturday 31st August 2019 with great zeal and excitement. The correspondent Mr.Henry Basinger welcomed the gathering. The chief guest Mr.P.S.Ramakrishnan, Superintendent of Police.,NIB CID., delivered a speech emphasizing the importance of sports in child life.The students displayed various events like Yoga, Mass drill, Lazzim, Pyramid, Saree dance and road safety awareness dance with energetic enthusiasm.Once the racesbegan , the air was filled with cheering tones of encouragement for the young atheletes. Fun games were conducted for staff and the parents. The prizes were distributed. The overall championship trophy was awarded to the Red house. The day was concluded with National Anthem.
  • Science Exhibition
  • Science exhibition was held in Nehru Vidhyasalai Hr.Sec.School on 06.09.2019. (Friday) Mr.M.Rajesh professor of P.G & Research , Department of zoology, the American college inaugurated the exhibition. Hundreds of students and teachers exhibited their devices and explained it skillfully. The chief guest ,and the principal ofBasinger Gardens Matric School the judges and selected the best three exhibits. The teacher exhibits also have been selected.
  • C-level athletic competition
  • Postal training and quiz programme was organized by the postal department.our students won many prize
  • Independence Day -2019
  • Our school celebrated the independence day with great enthusiasm and proudness on August 15th 2019. The Mr.jayachandran was the chief guest and hoisted the flag.
  • The students performed enthusiastically in different cultural events. At last sweets were distributed to the students and staff members.
  • “ Water Conservation awareness programme “
  • The students generated awareness of save water among the students though various programmes like awareness song, speech by Mrs. Abirami sundari and debate . About 130sudents of XI std participatedin the rally and marched along te students with slogans. Various competitions like essay writing, Speech, Poem writing and drawing were conducted and winners were selected.
  • Dr.A.P.J.Abdul Kalam
  • Remembering the former president Dr.A.P.J.Abdul Kalam on his death anniversary , We assembled the students and headmistress Mrs.Punitha gave on inspirational speech about the Missile man.
  • Kamarajar BirthDay
  • Kamarajar birthday was celebrated on 15.07.2019 with great enthusiasm and respect .The function started at 9am with prayer. Our school pupil leader Mohamed Yasir welcomed the gathering. Our Headmistress Mrs.Punitha gave an inspiring and motivating speech. The students presented colourful cultural programmes and speeches. The programmes concluded with vote of thanks.
  • Following this various competitions were conducted and the winners were selected.
  • Induction ceremony
  • Induction ceremony was held in our school on 04.07.19 (Thursday). School Pupil Leader , Asst. School Pupil Leader , class leaders, Assistant Leaders and various Ministers were introduced and honoured. The incharge Headmistress Mrs.Punitha lead the students in prayer and delivered the message on Leadership quality.
  • International Drug Abuse and Illicit trafficking Day
  • International Drug Abuse and Illicit trafficking Day was celebrated on 26.06.19 (Wednesday) Mrs. Anita Malathy gave a speech on the effects and causes of using drugs.
  • Our students participated in slogan writing and essay writing competitions on Drug Abuse which was conducted by
  • O Ashwin of XI F won II Prize in slogan writing and Vignesh of IX A2 got prize for Essay writing competition. They received awards from the commissioner of police , Madurai.